"திடீரென்று பூமியில் இருந்து 25 அடி உயரம் மேல் எழுந்த உறைகிணறு" அச்சத்தில் உறைந்த மக்கள்...

திருப்பதியில் கனமழை பெய்து வெள்ளக்காடாக இருக்கும் நிலையில், வீடு ஒன்றில் பூமிக்கடியில் இருந்த 25 அடி ஆழமுடைய உறைகிணறு ஓன்று திடீரென்று மேலே எழுந்த சம்பவம் அங்குள்ள மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.


கடற்கரை அருகிலும், மணல்பாங்கான இடங்களிலும் மண் சரிவினை தடுப்பதற்காக சுடு மண்ணினால் ஆன வளையங்களை கொண்டு அமைக்கப்படும் கிணறுகள் உறைகிணறுகள் என்று அழைக்கப்படுகிறது. திருப்பதியில் கடந்த சில வாரங்களாகவே பயங்கர மழை பெய்து வரும் நிலையில் ஸ்ரீ கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில் அமைக்கப்பட்டிருந்த உரை கிணறு ஓன்று சுமார் 25 அடி உயரத்தில் மேல் எழுவதை கண்ட வீட்டின் பெண் உரிமையாளர் பீதியில் கூச்சலிட்டு உள்ளார். 

"புடிங்க சார் அவன புடுச்சு ஜெயில போடுங்க சார்" பென்சிலை திருடியதால் சக மாணவனை போலீசில் மாட்டிவிட்ட சிறுவன்...

இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் அந்த காட்சியை நேரில் கண்டதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு அங்கு ஒரு சிற்றோடை இருந்ததாகவும், அந்த சிற்றோடை மீதுதான் தற்பொழுது வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இப்பொழுதும் அந்த நீரோடை உயிரோட்டத்துடன் இருப்பதால் தற்பொழுது பெய்துவரும் கனமழையின் காரணமாக அந்த ஓடையில் நீரோட்டம் ஏற்பட்டு அதனால் அங்குள்ள மண் தளர்ந்து கிணறு மேலே வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

ஏற்கனவே மக்கள் மழை வெள்ளத்தால் பதட்டப்பட்டு வரும் நிலையில் இது போன்ற நிகழ்வுகள் மேலும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பீதியை கிளப்பிய மேகக் கூட்டம்..உலகத்தில் ஏதாவது நடக்கப் போகிறதா?

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#Tirupati kinaru news in Tamil #Tirupati urai kinaru news in Tamil #well issue in Tirupati in Tamil #Tirupati news in Tamil| Tirupati latest news in Tamil #Rain in Tirupati in Tamil| Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates| Government Jobs for inter caste marriage | Jobs for Orphans


Related Videos