பாச போராட்டத்தால் மகனுக்காக தானே மருந்து தயாரித்த தந்தையின் நெகிழ்ச்சி சம்பவம் ..!!

சீனாவின் குன்மிங் மாகாணத்தில் வசிக்கும் 30 வயதான ஷூ என்பவர் பள்ளி படிப்பை தாண்டாதவர். இவர் லட்சங்களில் ஒருவருக்கு உண்டாகும் அரிதான மரபணு நோயிலிருந்து தன் மகனை காப்பாற்றுவதற்காக அரும்பாடு பட்டு ஒரு மருந்தை தானே தயாரித்துள்ளார். இந்த செய்தி மருத்துவ உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆன்லைனில் சிறு சிறு வியாபாரம் செய்து வந்த அவருக்கு 2 வயதில் ஹயோயாங் என்ற ஆண் குழந்தை இருக்கிறான். ஹயோயாங்கிற்கு மென்கஸ் சிண்ட்ரோம் ( Menkes Syndrome ) என்ற லட்சத்தில் ஒருவருக்கு வர கூடிய அரியவகை மரபணு நோய் இருக்கிறது.


இந்த மென்கஸ் சிண்ட்ரோம் நோய் குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு தேவையான கந்தக சத்தை உடலில் சேர விடாமல் தடுக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூன்று வயது வரை மட்டுமே உயிர் வாழ முடியும் என்பது மிகவும் வேதனையான உண்மை. ஹயோயாங்கால் பேசவோ, நடக்கவோ முடியாது என்றாலும் தன் மகன் மீது கொண்ட அளவில்லாத பாசத்தால் இந்த நோய்க்கான மருந்தை தேட ஆரம்பித்தார். ஆனால் ஷூவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

"ஊழியர்கள் தான் எங்களுடைய சொத்து" ஊழியர் குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி வழங்கிய நிறுவனம்!!!

இந்த அரியவகை நோய்க்கான மருந்து சீனாவிலையே கிடையாது என்ற உண்மை தெரிந்ததும் ஷூ தன் மகனை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என்று வெளிநாடுகளில் தேட முயற்சி செய்தார். ஆனால் கொரோன தோற்று காரணமாக சீன அரசு அணைத்து வெளிநாட்டு போக்குவரத்துகளையும் தடை செய்து வைத்திருந்தது. இதனால் அவரால் வேறு எங்கையும் மருந்தை தேட முடியாமல் போய்விட்டது. இத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து தானே மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஷூவுக்கு தோன்ற அவரின் தேடுதல் பயணம் மீண்டும் ஆரம்பமானது. மருந்து கண்டுபிடிக்க ஆய்வகம் ஒன்றை தன் வீட்டிலையே உருவாக்கினார். 


ஆங்கிலம் தெரியாத காரணத்தால் கூகிள் ட்ரான்ஸ்லேட்டரை (Google Translate ) பயன்படுத்தி மென்கஸ் சின்ரோம் பற்றிய தகவலை ஆங்கிலத்தில் இருந்து சீன மொழிக்கு மொழிமாற்றம் செய்து தகவலை சேகரித்தார். இதன் பயனாக காப்பர் ஹிஸ்டாடின் ரசாயனம் நல்ல மருந்தாக இருக்கும் என்று கண்டுபிடித்தார். அந்த மருந்தை உருவாக்க காப்பர் குளோரைடு டைஹைட்ரேட்டை ஹிஸ்டிடின், சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் தண்ணீர் சேர்த்து ஆறு வார அயராத உழைப்பின் பயனாக முதலாவதாக காப்பர் ஹிஸ்டிடின் மருந்தை உருவாக்கினார்

பெற்ற பிள்ளைகளை ரோட்டில் 50,000 ரூபாய்க்கு கூவி...கூவி...விற்ற காவலர் காரணம் என்ன!!!

முதலில் முயல்களுக்கும், பின்னர் தனக்கும் அந்த மருந்தை செலுத்தி ஏதேனும் பின்விளைவுகள் இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டார். அந்த மருந்தினால் எந்த பின்விளைவுகளும் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு  தன் மகனுக்கு 2 வாரங்கள் தொடர்ந்து தினமும் செலுத்தினார். 2 வாரங்கள் கழிந்த பின்னர் ரத்த பரிசோதனை எடுத்து ஆய்வு நடத்தியதில் நல்ல முன்னேற்றம் இருப்பதையும் கண்டு பிடித்தார். இந்த மருந்தால் மென்கஸ் சின்ரோமை குணப்படுத்த முடியாது என்றாலும் ஜீவன் உள்ள தன் மகன் இந்த உலகில் உயிருடன் இருப்பான் என்ற நம்பிக்கையில் அந்த மருந்தை தினமும் தன் மகனுக்கு ஷூ அளித்து வருகிறார்.


காப்பர் ஹிஸ்டிடின் மருந்து ஒருசில மரபணு குறைபாடுகளையே சரி செய்யும் என்றும், குழந்தை பிறந்து 3 வாரங்களில் இந்த மருந்தை கொடுத்தால் மட்டுமே நன்மை உண்டாகும் வாய்ப்பு உள்ளதாகவும், எனவே இந்த மருந்து ஹயோயிங்கை  முழுமையாக குணப்படுத்தாது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். 

ஸ்ஷுவின் இந்த முயற்சியை கேள்விப்பட்ட சர்வதேச பயோடெக் நிறுவனமான Vector Builder மென்கஸ் சின்ரோம்க்கு ஸுவின் பங்களிப்புடனான ஜீன் தெரப்பி ஆய்வை துவங்கி உள்ளது. அந்த குழந்தை நலம் பெற்று நீண்டநாள் இந்த உலகில் வாழவேண்டும் என்று இறைவனை பிராத்திப்போம்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#The Chinese dad making medicine to treat his dying son in Tamil #dad making medicine in tamil #rare disease in Tamil #genetic disorders disease in tamil #what is genetic disease in Tamil #Menkes syndrome disease reason in tamil #Menkes syndrome medicine in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates| Government Jobs for inter caste marriage | Jobs for Orphans 

Related Videos