"ஊழியர்கள் தான் எங்களுடைய சொத்து" ஊழியர் குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி வழங்கிய நிறுவனம்!!!
சத்தீஸ்கரில் முதுகு தண்டு பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, தந்தை பணிபுரியும் நிறுவனமே ஒரே செக்கில் 16கோடி ரூபாயை வழங்கியுள்ளது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
சத்திஷ்கரில் கோல் இந்தியாவிற்கு(GOAL INDIA) சொந்தமான பொதுத்துறை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தில் சதீஷ் குமார் ரவி என்பவர் பணியாற்றிவருகிறார். தனது 2 வயது மகளான சிருஷ்டி ராணி மிகவும் அரிதான முதுகெலும்பு தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோய் தாக்கினால் முதுகுத்தண்டு மற்றும் மூளைத்தண்டில் உள்ள நரம்புகள் செயல் இழப்பால் தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். இது மரபணு கோளாறு காரணமாக ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இத்தகைய இந்தியாவில் உள்ள சில குழந்தைகள் இந்த அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த குழந்தைகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் பணம் திரட்டப்படுகிறது. மத்திய அரசும் மருந்தின் மீது 6கோடி வரி விலக்கும் அளிக்கிறது. இந்த கோளாறுக்காக சிருஷ்டி ராணி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் பிலாஸ்பூர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது திப்காவில் உள்ள ஒரு வீட்டில் வெண்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சையில் உள்ளது. குழந்தைக்கு அமெரிக்கா நிறுவனமான Novartis தயாரிக்கும் Zolgensma என்ற மருந்தை செலுத்த வேண்டும்.
ட்ரக்கிலிருந்து ரோட்டில் விழுந்த "பணம்" துள்ளிக்குதித்து பணத்தை அள்ளிய மக்கள் ...!
இந்த ஊசியின் விலை சுமார் ரூ.16 கோடியாகும்..இது குறித்து சதீஷ்குமார் ரவி தனது நிறுவனத்திடம் முறையிட்டார். கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் 1991- ஆம் ஆண்டின் I.A.S அதிகாரியுமான பிரமோத் அகர்வால் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .அவர் மேற்கொண்டு நடவடிக்கையினால் குழந்தைக்கு மருந்திற்கான செலவு அனைத்தையும் நிறுவனமே ஏற்றுக்கொள்ள முன்வந்தது. ரூ.16 கோடிக்கான காசோலையை அந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான சஷாங் சங்கர் தேவகங்கன் சதீஷ் குமார் ரவியிடம் வழங்கினார்.
ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் ஒரு நிறுவனத்தின் உண்மையான செல்வங்கள் அதனால் அவர்களின் உயிர்களை காப்பாற்றுவது தான் முதன்மையான கடமை என்பதற்கு முன்மாதிரியாக எங்களுடைய நிறுவனம் செயல்பட்டுள்ளது என்று சஷாங் சங்கர் தேவகங்கன் கூறியுள்ளார்.
Watch :Bachelor Tamil Movie - Official Trailer
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
#Coal firm gives Rs 16 crore to employee for daughter's Treatment news in tamil # Coal India to buy Rs 16 crore injection for worker's ailing child#16 crore injection why so expensive news in Tamil#Coal India Sanctions Rs 16 Crore News in Tamil #zolgensma injection price in india in tamil #16 crore injection karnataka news in Tamil #16 crore injection in india news in Tamil #goal india donation in tamil #16 crore injection for which disease in Tamil #16 crore medicine in tamil | Latest ne ws in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Government jobs news in tamil| recent job news in tamil.