பெற்ற பிள்ளைகளை ரோட்டில் 50,000 ரூபாய்க்கு கூவி...கூவி...விற்ற காவலர் காரணம் என்ன!!!

பாகிஸ்தான் சிறைக்காவலாளி ஒருவர் தான் பெற்ற பிள்ளைகளை 50,000 ரூபாய்க்கு கூவி கூவி விற்க முயன்ற காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் நிசார் லஷாரி, இவர் அங்கு சிறைக்காவலராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் நிசாரின் மகனுக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே மகனின் சிகிச்சைக்காக நிசார் விடுப்பு வேண்டும் என்று மேலதிகாரியிடம் கேட்டுள்ளார்.

மேலதிகாரி விடுப்பு வழங்குவதற்கு லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் நிசாரிடம் பணம் இல்லாததால் அதிகாரி கேட்ட பணத்தை கொடுக்க முடியவில்லை. இதனால் மேலதிகாரி அவருக்கு விடுப்பு கொடுக்க மறுத்து அவரை சுமார் 120கீ.மீ தொலைவில் லார்கான என்ற பகுதிக்கு பணி இடமாற்றம் செய்துள்ளார். இதனால் நிசார் ஒரு தொலைக்காட்சியில் லட்சம் கொடுக்காத காரணத்திற்காக ஏன் என்னை பணியிடமாற்றம் செய்தனர் என்று கேட்டுள்ளார்.

குதித்த நொடியே கல்லாக மாற்றும் மர்மம் நிறைந்த ஏரி...!!!


நான் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளேன், இப்பொழுது என் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுப்பதா? இல்லை லஞ்சம் கொடுப்பதா? என்று கேட்டுள்ளார். எனவே மனவேதனையில் முதல் மகனை கையில் பிடித்துக்கொண்டு, இரண்டாவது மகனை தொழில் சுமந்தபடி அவர்களை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்று நடுரோட்டில் நின்ற வீடியோ வைரலாகி வருகிறது.

ஒரு மணி நேரத்துல '101 கோடி' ரூபாய் வருமானம்...! 'பட்டாசு' கெளப்பிய நபர்...

தற்போது அந்த வீடியோ, சிந்து மாகாணத்தின் முதல்வரான முராத் அலி ஷா- வின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அவருக்கு மகனின் சிகிச்சைக்காக இரண்டு வாரங்கள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிசார் உண்மையாக தன் மகன்களை விற்க முயற்சிக்கவில்லை அவரின் மன குமுறலை தான் இந்த மாதிரி வெளியிட்டுள்ளார் என்று நெட்சங்கள் கூறி வருகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

viral video pakistani police sell his own children | Pakistani police official tries to sell his children on streets| Viral Video Shows Cop Trying to Sell His Own Children | Pakistan police news in tamil| Pakistan police man sell his son news in tamil| Pakistan news in tamil| Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | news in India cinema.sebosa | interesting news in Tamil |celebrity news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil

Related Videos