கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளக்காடாக மாறிய திருப்பதி கோவில்!!!...

 திருப்பதியிலும் விடாமல் விளாசும் மழையால் .. பாதுகாப்பு கருதி திருப்பதி சாலை போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.. பக்தர்கள் ஷாக்

திருப்பதி கனமழை

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிநாடு மற்றும் ஆந்திராவில் கடக்க இருப்பதால், நேற்று இரவு முதலே தெற்கு ஆந்திராவில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திருப்பதி திருமலை கோவிலில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் அந்நகரம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நகரின் முக்கிய சாலைகளிலான யுனிவர்சிட்டி ரோடு, ஏர் பை பாஸ் ரோடு ஆகிய சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ReadAlso:"சின்னத்திரை நடிகை" வைஷ்ணவி அருள்மொழியை பார்த்து ரசிகர்கள் அனுதாபம்!!!

போக்குவரத்து நிறுத்தம்

இப்படித் தொடர்ந்து கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி மலைக்குப் பாத யாத்திரையாகச் செல்ல பயன்படுத்தப்படும் மலைப் பாதை பக்தர்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.. சாலை போக்குவரத்து மட்டும் இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திருப்பதி - திருமலை இடையேயான சாலை போக்குவரத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. திருமலை - திருப்பதி இடையேயான சாலை போக்குவரத்து குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 நீர் தேக்கம்

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியே வரக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளில் மரங்களும் முறிந்து விழுந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.

ReadAlso:ஓட்ஸ்(oats) அடையும் தொட்டுக்க நச்சுனு ஒரு channa கிரேவியும்...

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#Tirupati Floods #Watch tirupathi flood Video|tirupathi rain news in tamil| tirupathi weather report | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates


 

Related Videos