ஓட்ஸ் (oats) அடையும் தொட்டுக்க நச்சுனு ஒரு channa கிரேவியும்.......

ஓட்ஸ் அடை தேவையான பொருட்கள்:

ஓட்ஸ்                     -50gm 

கோதுமை மாவு  -4table spoon

வெங்காயம்         -1

பச்சை மிளகாய் -3

கேரட்                      -1

குடைமிளகாய்     -1

கறிவேப்பிலை     -1கொத்து 

மல்லித்தழை        -1கைப்பிடி 

ஓட்ஸ் அடை செய்முறை:

    ஒரு பாத்திரத்துல ஓட்ஸ்,நறுக்கிய கேரட்,பச்சை மிளகாய்,குடைமிளகாய்,கறிவேப்பிலை,மல்லித்தழை ,மற்றும் வெங்காயம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கிளறிவிடவும்,பின்பு கோதுமை மாவை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அடை மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.

    இந்த அடை மாவு தண்ணீர் போன்று இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.மாவு ரெடி ஆனதும் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் (மிதமான சூட்டில் இருக்க வேண்டும்)மாவை ஊற்றி சிறிதளவு என்னை ஊற்றி இரு புறமும் வேக வைத்து எடுத்தால் ஓட்ஸ் அடை ரெடி அனைவரும் உண்டு மகிழுங்கள்.

சுண்டல் கறி தேவையான பொருட்கள்:

வேகவைத்த சுண்டல் -100gm 

எண்ணெய்                    -தேவைகேற்ப 

சீரகம்                              -1(டீ ஸ்பூன்)

கறிவேப்பிலை              -1கொத்து 

பெரிய வெங்காயம்     -1

தக்காளி                          -1

மல்லித்தழை                 -1கைப்பிடி 

மஞ்சள் தூள்                   -1(டீ ஸ்பூன்)

மிளகாய் பொடி             -காரத்திற்கேற்ப 

மல்லிப்பொடி                 -1(table ஸ்பூன்)

கறிமசால் பொடி           -1(table ஸ்பூன்)

இஞ்சி&பூண்டு                -சிறிய துண்டு இஞ்சி,4பல் பூண்டு 

தேங்காய்                         -1(table ஸ்பூன்)

உப்பு                                  -தேவையான அளவு 

ஆயில்                               -தேவையான அளவு

காரமான சுவையான பிடி கொழுக்கட்டை செய்முறை......

சுண்டல் கறி செய்முறை:

        ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி,கறிவேப்பிலை,இஞ்சி,பூண்டு,மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நயமாக அரைத்துக்கொள்ளவும்.

       பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போடவும் பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும் பின்பு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்பு அதில் மிளகாய் பொடியும்,கறிமசால் பொடியும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் இறுதியில் தேவையான அளவு உப்பும்,மல்லிதழையும் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால் சுவையான channa மசாலா ரெடி.

    இந்த கிரேவியை இட்லி,தோசை,சப்பாத்தி போன்றவைகளுக்கு சூப்பராக இருக்கும்.சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.so இந்த சுவையான இரண்டு recipes-யும் செஞ்சு அசத்துங்க.

பின்குறிப்பு:

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Oats Adai Receipe in Tamil | Wheat Adai Recipe in Tamil | Weightloss Receipies in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos