சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி??
கடலைமாவும்,நெய்யும் புதுசா இருந்தால் மைசூர் பாகு நன்றாக இருக்கும்.நெய்யை சூடு படுத்தி செய்தால் தான் மைசூர் பாகு கலராக வரும்.
தேவையான பொருட்கள்:
கடலைமாவு - 1/2 கப்
நெய் - 1 கப்
சமையல் எண்ணெய் -1/2 கப்
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
சுவையான ஹார்ட் ஷேப் முறுக்கு செய்முறை??
சுவையான மைசூர் பாக் செய்முறை:
*கடலைமாவுன் 1/2 கப் எண்ணெய் கலந்து கட்டியில்லாமல் கலக்கவும்.
*கடாயில் சர்க்கரையுடன் தண்ணீர் கலந்து 1 கம்பி பதம் எடுக்கவும்.
*1 கம்பி பதம் என்பது கட்டை விரலுக்கும்,ஆள்காட்டி விரலுக்கும் 1 இழை போல வரும்.அதுதான் சரியான பதம்.
*இன்னொரு அடுப்பில் சிறுதீயில் நெய்யை சூடு படுத்தவும்
*1 கம்பி பதம் வந்ததும் கடலைமாவினை ஊற்றி நன்கு கலக்கவும்.
*கொஞ்ச கொஞ்சமாக சூடுபடுத்திய நெய்யை ஊற்றவும்.மாவு நன்றாக பொங்கி வரும்.கவனமாக செய்யவும்.
*கடைசியாக மாவு ஓரங்களில் ஒட்டாமல் கூடு போல வரும் போதும் ,நெய் பிரிந்து வரும் போதும், இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி இளஞ்சூடாக இருக்கும்போது துண்டுகள் போடவும்.
பின்குறிப்பு:
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Mysore Pak Receipe in Tamil | Sweet & Taste Mysore Pak Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil