உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?

  தூங்க நகரம்

உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?

"The World's only living civilization"

உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரிய வந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.

Selfie Tamil Movie - Official Trailer

ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு நகரம் "மதுரை "தான் என்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்து பிரம்மித்துபோய் உள்ளனர்.

நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை

"The World's only living civilization" 

என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டறியப்பட்டுள்ளது.

Read Also : பெட்டியில் படுத்து பட்டனை தட்டினால் பிரியும் உயிர்..!!

இதில் வியக்கத்தக்க விசயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கண்டு கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளதிற்காக கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது. 

இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.

அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கடைபிடித்து வருகின்றனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக வழிபடுவதாகவும் இதற்கான காரணம் என்னவென்று தெரியாது என்றும் அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Read Also: முப்படைத்தலைவர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் இளமைக்கால புகைப்படங்கள் மற்றும் திருமண பத்திரிகை...!!!

அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.

ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமில்லாமல், ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருவது பிரம்மிப்பாக உள்ளதல்லவா?

அது மட்டுமல்ல மதுரைக்கு "தூங்கா நகரம்" என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை மதுரை தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.

ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும் மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வருவது நம்ம நாட்டு நகரம் மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!..

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Day to day updates in Tamil | History of Madurai in Tamil  | oldest civilization in Tamil Nadu | oldest continuously inhabited cities in the world. | about madurai | thionga nagaram | old living civilization in tamil | 600 years old living civilization in Tamil | Latest news in Tamil | trending news in Tamil | cinema news in Tamil | serial News In Tamil | job news in Tamil | India News In Tamil


Related Videos