"அவர் உயிருடன் இருந்தார் என்னிடம் இறுதியாக தண்ணீர் கேட்டார்" முப்படைத்தலைவர் பிபின் ராவத்தை கடைசியாக பார்த்த நபர்...!!
இந்தியாவில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான நிலையில், அதிலிருந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தை உள்ளூர் தொழிலாளி ஒருவர் கடைசியாக உயிருடன் பார்த்ததாகவும், அவர் பேசியதை கேட்டதாகவும் கூறியுள்ளார்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது, இதில் பாதுகாப்புப் படைத் தலைவர் (Chief of Defence Staff) ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார், அவர் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விபத்து நடந்த நாள் புதன்கிழமை மதியம் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது, அதன் அருகே சிவக்குமார் என்பவர் சென்றுள்ளார், அங்கு எரிந்துகொண்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேர் வெளியே வந்ததாக கூறியுள்ளார்.
குன்னூர் டவுனில் வசிக்கும் கட்டிட ஒப்பந்ததாரரான சிவக்குமார், தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தனது மைத்துனரை பார்க்க வந்துள்ளார்.
அவர் கூறுகையில், "பக்கத்தில் ஒரு ஹெலிகாப்டர் விழுந்து விட்டது என்று எனது மைத்துனர் கூறினார். நான்காம் பக்கத்தில் இருந்ததால் சம்பவ இடத்துக்கு சென்றோம். அங்கு ஹெலிகாப்டர் இரண்டாகப் பிளந்து தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு தகவல்!
20 அடி உயரத்திற்கு நெருப்பு எரிந்ததால் எங்களால் அருகில் செல்ல முடியவில்லை. நாங்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தோம். அதன்பிறகு, யாரேனும் உயிருடன் இருந்தால் காப்பாற்றலாம் என அருகில் சென்றோம், அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மூன்று பேர் வெளியே வந்து விழுந்து கிடந்தனர்.
சரியான பயிற்சி இல்லாத காரணத்தால் எல்லோராலும் விபத்து பகுதிக்கு செல்ல முடியவில்லை. நான் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி பெற்றவன் என்பதால், நான் மட்டும் சென்று பார்த்தேன். மூவரும் தீக்காயங்களுடன் உயிரோடு இருந்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரை வெளியே எடுத்தபோது. அவர் என்னிடம் தண்ணீர் கேட்டார். விபத்து நடந்த இடமும் நங்கள் வசிக்கும் இடமும் தூரமாக இருந்ததால் எங்களால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை, பின்னர் அவரை மீட்புக்குழுவினர் அழைத்துச் சென்றனர்.
பெட்டியில் படுத்து பட்டனை தட்டினால் பிரியும் உயிர்..!!
பின்னர், ஒருவர் புகைப்படத்தைக் காட்டி விசாரித்தபோது தான் தண்ணீர் கேட்ட நபர் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் என்பது எனக்குத் தெரிந்தது" என்று சிவகுமார் கூறினார்.
சிவகுமார் மேலும் கூறுகையில்,"மிகப்பெரிய தளபதி, நம் தேசத்தை காப்பாற்றுபவர், அவர் என்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டு கொடுக்க முடியவில்லையே என மிகவும் வருத்தப்பட்டேன் என்றும், பின்னர் அவர் இறந்துவிட்டார் என கேள்விப்பட்டதும் என்னால் இரவு முழுவதும் தூங்கமுடியவில்லை" எனவும் வருத்தமுடன் கூறினார்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Latest News in Tamil| upcoming trailer in tamil| trending news in tamil| coonoor Helicopter crash news in Tamil| Tributes for India's top general who died in helicopter crash in Tamil | bipin rawat death news In Tamil| Gen Bipin Rawat Chopper Crash | Helicopter Crash Tamil news| Bibin Rawat Live victims after crash