"ஓமிக்ரான்" உருமாறிய கொரனாவின் அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள்...

26 நவம்பர் 2021 அன்று, WHO இன் வைரஸ் பரிணாம வளர்ச்சியின் (TAG-VE) தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் ஆலோசனையின் பேரில், WHO B.1.1.529 என்ற மாறுபாட்டை Omicron எனப் பெயரிடப்பட்டது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடியும் தருவாயில் இருக்கிறோம். இன்னும் இதிலிருந்து மீளவில்லை. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் B.1.1.529 என்னும் புதிய திரிபு நவம்பர் 22 அன்று சர்வதேச தரவுத்தளத்துடன் பகிரப்பட்டது.


SARS -CoV-2 மாறுபாடு அதன் சிக்கலான மரபணு குறியீட்டின் காரணமாக கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த மாறுபாடு இது. இந்த புதிய வைரஸ் தடுப்பூசியின் செயல்திறனை தடுக்கும் அளவுக்கு வீரியம் கொண்டதாக இருப்பதால் மருத்துவ குழுவையும், ஆராய்ச்சியாளர்களையும் பீதியடைய செய்துள்ளது. இதற்கு "ஓமிக்ரான்" என்ற பெயர் கிரேக்க மொழியிலிருந்து வைக்கப்பட்டுள்ளது. 

​ஓமிக்ரான் கோவிட்- ன் மாறுபாடுகள்: 

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஓமிக்ரான் வைரஸ் 30 மடங்கு உருமாறிய கொரோனா வைரஸ் என்பதும், இந்த வைரஸ் கொரோனா வைரஸை விட அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொண்ணு வரைந்த drawing-னால அப்பா கைதா ?!!!

ஓமிக்ரான் மிகவும் ஆபத்தானவையா?

உலக சுகாதார நிறுவனம் இந்த கொரோனா திரிபை கவலைக்குரிய திரிபு என்று வகைப்படுத்தியுள்ளது. அடிப்படையில் இது வேகமாக பரவும் அபாயம் கொண்டவை. இந்த திரிபில் உள்ள அனைத்து மரபணு பிறழுகளும் ஆபத்தானவை இல்லை என்றாலும், சில பிறழ்வுகள் காரனமாக இது தொற்றையும் அதிகரிக்கும், உடலில் அதிகமான பாதிப்பையும் உண்டாக்கும் என்பதால் இது கவலைக்குரிய திரிபாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று உண்டாவனர்களுக்கு இந்த புதிய வைரஸ் தாக்குவதற்கான அபாயம் உண்டாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

​ஓமிக்ரானின் அறிகுறிகள்:

தென்னாப்பிரிக்காவின் தொற்றுநோய்களுக்கான தேசிய நிறுவனம் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் கோவிட் ஏற்படும்போது உண்டாகும் தீவிர சோர்வு இலேசான தலைவலி, தொண்டை அரிப்பு மற்றும் வறட்டு இருமல் போன்றவை இருக்கலாம் என்றும் வெகு அரிதாக சிலருக்கு மட்டுமே காய்ச்சல் உருவாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது பிற தொற்று வகைகளை போல அறிகுறியில்லாமலும் இது தாக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கென்று தனியான அறிகுறிகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றும் அதற்கு சில நாட்களில் இருந்து பல வாரங்கள் ஆகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒமிக்ரானில் இருந்து தற்காத்துகொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை:

எப்போதும் எல்லா இடங்களிலிலும் மற்றவர்களிடமிருந்து குறைந்தது 1 மீட்டர் தூரம் இருக்க வேண்டும். வெளியிடங்களில் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும்.

சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய மம்மி பெரு நாட்டில் கண்டுபிடிப்பு !!!

மோசமான காற்றோட்டம் அல்லது நெரிசலான இடங்களை தவிர்க்க வேண்டும். 

கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 

இருமும் போது முழங்கை வளைவுகளை கொண்டு இரும வேண்டும்.

தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.

முடிந்தவரை நம்மையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டு, நம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக்கொண்டாள் இம்மாதிரியான நோய்களில் இருந்து தப்ப இயலும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#omicron symptoms in Tamil #what is Omicron in Tamil #Omicron safety In Tamil #How dangerous is Omicron Varian in Tamil #Omicron Vaccine #covid recent variant name in Tamil #covid-19 recent updates #omicron new virus in Tamil #All news About Omicron In Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates| Government Jobs for inter caste marriage | Jobs for Orphan

Related Videos