தெறியாமல் ஆபத்தில் மாட்டி இரண்டு இரவுகளை கழித்த திகில் அனுபவம்!!! உண்மை சம்பவம்...
மேன் VS வைல்ட் என்ற சாகச தொடரில் வருவது போன்ற ஒரு சம்பவம் உத்ரகாண்ட் மாநிலத்தில் ஒரு இளைஞருக்கு நடந்துள்ளது. இந்த சம்பவம் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உத்ரகாண்ட்டைச் சேர்ந்த அனுராக் சிங் என்ற பலூன் வியாபாரி ஒருவர் ரிஷிகேஷில் வியாபாரத்தை முடித்துவிட்டு வழக்கம்போல தனது சொந்த ஊரான பிஜ்னோருக்கு சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் ராஜாஜி என்ற புலிகள் சரணாலயம் உள்ளது. அதன் அருகில் சில்லா என்ற காடு ஓன்று உள்ளது அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுப்பதற்காக வண்டியை நிறுத்தியுள்ளார். அந்த காட்டின் பின்புறத்தில் கங்கை நதி சிலு சிலுவென ஓட, இயற்கையின் அழகில் மயங்கி ரசித்துக் கொண்டிருந்தார்.
தான் கண்ட அழகிய காட்சியை போட்டோ எடுப்பதற்காக செல்போனை எடுத்தார். அப்போது புதரில் இருந்து ஒரு சிறுத்தை பாய்ந்து வந்து அவர் மீது பாய்ந்து தாக்க வந்தது, இதனால் திடுக்கிட்ட அவர் தன் உயிரை எப்படியாவது காப்பற்ற எண்ணி அருகில் இருந்த கங்கை நதியில் குதித்து விட்டார். புலியிடம் இருந்து தப்பியதாக எண்ணிய அவருக்கு அதை விட பெரிய ஆபத்து காத்திருந்தது, கங்கை நதியில் தண்ணீரில் மொழகிய நிலையில் மிதந்து சென்ற ஒரு மரக்கட்டையை பிடித்துக்கொண்டு ஒரு தீவு போன்ற கரையை அடைந்தார்.
தரையை எட்டிவிட்டோம் என்று சந்தோஷத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் அங்கு மனிதர்கள் நடமாட்டம் சிறுது கூட இல்லை. தான் வைத்திருந்த செல்போனும் நதியில் சென்று விட்டது, ஆனால் ஆறுதலாக அவர் பாக்கெட்டில் வைத்திருந்த தீப்பெட்டி ஒரு waterproof கவரில் இருந்ததால் நனையாமல் இருந்தது. பின்பு அங்குள்ள சிறு சிறு விறகுகளை வைத்து நெருப்புமூட்டி அவர் உடலை கதகதப்பாக்கிக் கொண்டார். இரவு அவரை நெருங்க தரையில் இருந்தால் காட்டு விலங்குகள் தாக்கிவிடும் அபாயம் இருப்பதால் ஒரு மரத்தின் மீது ஏறி அந்த இரவை கழித்தார்.
அடுத்தநாள் விடிந்ததும் யாராவது மனிதர்கள் இருக்கிறார்களா? என்று அங்கும் இங்கும் தேடி அலைந்தார். ஆனால் அவர் கண்களில் யாரும் தென்படவில்லை. அன்றைய இரவும் சிறு விறகுகளால் தீ மூட்டி மரத்தின்மீது படுத்துக்கொண்டார். அடுத்தநாள் மீண்டும் தேட தொடங்கினார் தேடலின் இறுதியில் ஹரித்துவாரில் உள்ள ஷதானி காட் என்ற இடத்தை அடைந்தார். அங்கும் மரத்துண்டுகளை வைத்து தீமூட்டிய அவர் தீயிலிருந்து வந்த புகையை யாரவது பார்த்து நம்மை காப்பற்ற வர மாட்டார்களா? என்று பசியிலும், குளிரிலும் வாடினார்.
"ஊழியர்கள் தான் எங்களுடைய சொத்து" ஊழியர் குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி வழங்கிய நிறுவனம்!!!
காட்டிலிருந்து புகை வருவதை ஹரித்துவார் சப்தரிஷி பஜார் காவல் அதிகாரியான ராவத் கண்டார். உடனே அவர் புகை வரும் இடத்தைநோக்கி சென்றார் அப்போது அங்கு அனுராக் சிங் குளிரிலும், பசியிலும் மோசமா நிலையில் இருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.
3 நாட்களாக தான் இந்த காட்டில் இருந்த அனுபவங்களை கேட்டறிந்த போலீசார், உடனே கங்கை நதியில் ரோந்து செல்லும் ஜல் போலிஸுக்கு தகவல் அளித்தார். உடனே அவர்கள் அனுராக் சிங்கை மீட்டு அவருக்கு உடையும், உணவும் அளித்து ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரின் சொந்த ஊருக்கு அனுராக் சிங்கை அனுப்பி வைத்தனர். இந்த அனுபவத்தை அவர் வாள்முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த நிகழ்வை பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு கமெண்ட் செய்யுங்கள்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil | Uttarakhand Rajaji Tiger Reserve sees real-life Man vs Wild| Anuraak sing nwes in tamil| man vs wild tamil | man fall ganga news in tamil | scare news in tamil|