4500 ஆண்டுகள் பழமையான 3-வது சூரிய கோவில் எகிப்த் நாட்டில் கண்டுபிடிப்பு..!!
எகிப்தில் 6 சூரிய கோவில்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் 3- வது கோவிலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தொல்பொருள் ஆராய்ச்சி இடமாக கருதப்படும் எகிப்த் நாட்டின் அபுகோரப் என்ற இடத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்ட போது சூரிய கோவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோவிலை கி.மு 5-ஆம் நூற்றாண்டில் பார்வோன் நியூசேர் இனியால் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கி.மு 25 நூற்றாண்டில் சுமார் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த மன்னர் Nyuserre Ini என்பவரால் கட்டப்பட்ட சூரியகோவிலின் எச்சங்களை தொல்பொருள் இடமான அபுசிரின் வடக்கே உள்ள பகுதியில் ஆராச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதன் பின்பு பாலைவன மணலில் புதைபட்டிருந்த சூரிய கோவிலையும் கண்டுபிடித்தனர்.
கெய்ரோவிற்கு தெற்கே 12 மைல் தொலைவில் உள்ள அபு குராப் என்ற இடத்தில் உள்ள மற்றொரு கோவிலுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த மத்தியதரைக் கடல் மற்றும் ஓரியண்டல் கலாச்சாரங்களுக்கான எச்சங்களை தொல்பொருள் குழு கண்டுபிடித்தது, இந்த செய்தியை போலந்து அகாடமி ஆஃப் சயின்சஸ் இன் எகிப்தியலஜி பேராசிரியரான நுஸோலோ கூறியுள்ளார்.
இதன் அசல் கட்டுமானம் முற்றிலும் மண்ணால் உருவாக்கப்பட்ட கற்களால் ஆனது, மேலும் அதை தோண்டிய போது அக்குழு டஜன் கணக்கான ஜாடிகளைக் கண்டறிந்துள்ளது, இதில் சில ஜாடிகளில் சடங்கு சேறு நிரப்பப்பட்டு இருந்ததாகவும், இந்த மண்பாண்டங்கள் கிமு 25 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த நியூசெரா மன்னரின் ஆட்சிக்காலத்தின் ஒரு தலைமுறை அல்லது இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய மத சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் ஆய்வுக்குழு கூறியுள்ளது.
ReadAlso:நாசா காணக்கிடைக்காத செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது...!!
இந்தக் கோயில்கள் சூரியக் கடவுளான "ரா" வின் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிலையில், அப்போதைய அரசர் இந்த கோயிலின் மூலம் தனது அதிகாரத்தை சட்டப்பூர்வமாக்கிக் கொண்டார். மேலும் நான் தான் இந்த பூமியில் சூரிய கடவுளின் ஒரே மகன் என்றும் கூறிக்கொண்டார் . பொதுவாக இந்த கோவில் வாழும் அரசரை தெய்வமாக்குவதற்கான மறைமுக இடமாக இருந்தது" என்று ஆய்வாளர் நுசோலோ கூறினார்.
மொத்தம் ஆறு சூரியக் கோயில்கள் கட்டப்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இரண்டு மட்டுமே இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டன, என்று நுசோலோ கூறினார். இந்த ஆதாரங்களில் இருந்து சூரியன் கோவில்கள் அனைத்தும் அபு கராப்பைச் சுற்றி கட்டப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. .
இப்பொழுது மூன்றாம் நிலை கோவிலையும் கண்டுபிடித்துள்ளதால் தொல்பொருள் நிபுணர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.