செல்போன் அதிகம் யூஸ் பண்றீங்களா!!உசார் வருகிறது ஆபத்து?..

தற்போதைய நவீன உலகில் வேலை செய்வதற்கு மிகவும் முக்கியமாக பயன்பாட்டில் இருப்பது கணினி மற்றும் திரைகள் தான். சிறிது கூட ஓய்வில்லாமல் மணிக்கணக்கில் பலர் கணினி முன்பே அமர்ந்து இருப்போம். டிஜிட்டல் முறையில் செய்திகளும் சேவைகளும் அதிகமாகி விட்டதால் நம் உலகமே கணினி மற்றும் மொபைல் என்றாகிவிட்டது. சரி வேலை முடிந்து விட்டது இனி ஓய்வு நேரம் என்றாலும், பலர் கணினியில் இருந்து எடுத்த கண்களை அப்படியே செல்போனில் பதிய வைக்கின்றனர்.

​உடல்நலச் சிக்கல்கள்

ஏற்கனவே செல்போன்கள் மற்றும் கணினியின் பயன்பாடுகள் நம்மை ஆட்கொண்டு விட்ட நிலையில் கோவிட் - 19 காரணமாக மேலும் அதிகமாக திரை சார்ந்த பொருட்களின் பயன்பாடு நமது மன ஆரோக்கியம் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கண் பார்வையில் குறைபாடு அல்லது சிரமம், கழுத்து வலி, கவலை உடல் பருமன் மற்றும் பிற உடல்நலச் சிக்கல்கள் ஏற்படுகிறது.


​பக்கவாத அபாயம்

சமீபத்திய மருத்துவத் துறையின் ஆய்வின்படி, கணினி, செல்போன்கள் மற்றும் மின்திரை சார்ந்த சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமா உள்ளதாக கண்டறிந்துள்ளனர். அமெரிக்கன் ஸ்ட்ரோக் அசோசியேஷனின் ஸ்ட்ரோக் ஜர்னல் வெளியிட்டுள்ள ஆய்வில், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும் இளைஞர்களை காட்டிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் அதிக நேரம் செல்போன் மற்றும் கணினியை பயன்படுத்துபவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.


​யார், எவ்வளவு நேரம் திரையைப் பயன்படுத்தலாம்

ஆறு வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே மின் திரையைப் பார்க்க வேண்டும் என்றும், 8 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் 4 மணி நேரம் மட்டுமே செல்போன்கள் மற்றும் கணினியை பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிக நேரம் டிவி, மொபைல் பார்ப்பதால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

ReadAlso:4500 ஆண்டுகள் பழமையான 3-வது சூரிய கோவில் எகிப்த் நாட்டில் கண்டுபிடிப்பு..!!

​பக்கவாதத்துக்கும் திரைப் பயன்பாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பு


மற்றொரு ஆய்வு பக்கவாதம் மற்றும் திரை பயன்பாடு இவை இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை சுட்டிக்காட்டியுள்ளது. 2 மணிநேரம் தொடர்ந்து டிவி, மொபைல், கணினி போன்றவற்றை திரையைப் பயன்படுத்தினால், பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது என்பதை இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. தொடர்ச்சியான பயன்பாடு இரண்டு மணிநேரத்திற்கு மேல் இருந்தால், அவைகள் தான் நம் வாழ்கையாக மாறிவிடும். மேலும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை மேலும் 20 சதவிகிதம் வரை அதிகரிக்கும்.

டிவி, மொபைல், கணினி பயன்படுத்தும் நேரம் இளைஞர்களிடம் தான் அதிகரித்து வருகிறது. இது உண்மையில் ஆபத்தானது. மேலும், இது தேவையற்ற உடல்நலப் பிரச்சனைகளையும் உங்களுக்கு ஏற்படுத்தும்.

மொபைல், தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் இருந்து வரும் நீல நிற ஒளி மெலடோனின் உற்பத்தியைக் குறைக்கிறது. இது தூக்க சுழற்சியைக் கட்டுப்படுத்த உதவும் இரவில் வெளியிடப்படும் ஹார்மோன் ஆகும். நாம் இரவில் செல்போன்களை பயன்படுத்தும் போது அந்த வெளிச்சத்தால் மூளையில் இது இறைவா? பகலா? என்ற குழப்பம் ஏற்படுகிறது இதனால் தூக்கமின்மை ஏற்பட்டு நம் உடலின் அணைத்து செயல்பாடுகளையும் பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

​எப்படி சமாளிப்பது?

வேலை நேரத்துக்கு இடையே அடிக்கடி இடைவேளை எடுத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் உங்களின் திரை நேரத்தைக் குறைக்கலாம். அதேபோல், சரியான உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் நரம்பு சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் நீங்கள் விடுபடலாம். அடிப்படை உடற்பயிற்சியான நடைப்பயிற்சி மற்றும் சில யோகாக்கள் மூலம் சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். 

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Does using mobile affect brain?|  cell phone brain damage study|Mobile phone affects cerebral blood flow| llphone cause stroke| Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates



Related Videos