சீன மாமிச சந்தையில் மீண்டும் 18- வகையான கொடூர வைரஸ்கள்!!...
சீனா மாமிச சந்தையில் விற்கப்படும் மாமிசத்தால் மீண்டும் ஒரு பயங்கரமான உயிர்கொல்லி நோய் ஏற்படும் என்று ஆஸ்திரேலிய அறிஞர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
சீன மாமிசத்தை விற்கும் சந்தையில் இருந்து சேகரிக்கப்பட்ட கிருமிகளை ஆய்வு செய்த போது, அவை மனிதர்களுக்கும், வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கும் ஆபத்தான நோய்த்தொற்றுகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டவையாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் வெளியாகும் "The Straits Times" என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில் சீன மாமிச சந்தையில் மனிதர்களுக்காக விற்கப்படும் வன விலங்குகளில் சுமார் 71 வகையான கொடிய வைரஸ்கள் இருப்பதாகவும், அதில் 18 வகையானா விலங்குகளில் மிகவும் கொடிய வைரஸ்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ReadAlso:தலைக்கு தில்ல பாத்திங்களா? குட்டிக்கரணம் போடும் எலி!!!
இதனால் சீன மாமிச சந்தைகள் உலகிற்கு அச்சுறுத்தலையையும், பேராபத்தையும் ஏற்படுத்தும் அபாயகரமான மையங்களாக திகழ்வதாக புகழ்பெற்ற ஆஸ்திரேலிய உயிரியல் ஆராய்ச்சியாளர் "Edward Holmes" எச்சரித்துள்ளார். இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு மட்டும் பரவாமல், மனிதர்களில் இருந்து வீட்டு விலங்குகளுக்கும் பரவுவதால் உலகில் ஆபத்தான சூழல் உருவாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன மக்களால் அதிக அளவில் விரும்பி உண்ணப்படும் Civets எனப்படும் ஓரு வகை பூனை இனத்தில் மிக கொடிய நோய்பரப்பும் கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் National key research & Development program என்ற அமைப்புகளும் இந்த ஆய்விற்கு துணை நின்ற நிலையில் Civets-களில் இருக்கும் கொடிய உயிர்கொல்லி கிருமிகள் மனிதர்களுக்கு பரவும் ஆபத்து அதிகம் இருப்பதாகவும், அவ்வாறு பரவினால் மீண்டும் மனித இனம் பெரிய ஆபத்தை சந்திக்கும் என்றும் Edward Holmes எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே சீனாவின் உஹான் நகரத்திலிருந்து பரவிய கோவிட்- ன் தாக்கம் இன்னும் உலக நாடுகளை உலுக்கும் நிலையில் இந்த செய்தி மேலும் பீதியை உருவாகியுள்ளது.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.