சுவையான நெய் பாயாசம் செய்வது எப்படி???

இது நாம் செய்யும் சர்க்கரை பொங்கல் தான்,ஆனால் இதில் அரிசியை மசிக்காமல் செய்வார்கள்,மேலும் இதில் விரும்பினால் மட்டும் முந்திரி திராட்சை சேர்க்கலாம்.

நெய் அதிகமாகவும்,தேங்காயை பல்லாக நறுக்கியும் சேர்ப்பார்கள்.மேலும் இதில் கேரளா பச்சரிசியில் செய்வார்கள்.

தேவையான பொருட்கள்:

பச்ச‌ரிசி -1/2 கப்

நீர்- 1 கப்

நெய் -1/4 கப்

வெல்லம்- 1 கப்

ஏலக்காய்த்தூள்- 1/8 டீஸ்பூன்

சுக்குப்பொடி- 1/8 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய தேங்காய்ப்பல் -1/8 கப்

செய்முறை விளக்கம்:

*குக்கரில் அரிசி மற்றும் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.

*பாத்திரத்தில் வெல்லம் மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் வெல்ல நீரை வேகவைத்த அரிசியில் சேர்த்து கொதிக்கவிடவும்.

*இடையே 1/8 கப் நெய்யினை சிறிது சிறிதாக  சேர்க்கவும்.

ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி???

*பாயாசம் கெட்டியாக வரும் போது ஏலக்காய்த்தூள் மற்றும் சுக்குப்பொடி சேர்த்து இறக்கவும்.

*மீதமுள்ள நெய்யில் தேங்காய்ப்பல்லினை பொன்னிறமாக வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.

பின் குறிப்பு:

*வெல்லம் மற்றும் நெய் அதிகம் சேர்த்திருப்பதால் இதனை சிறிதளவே சாப்பிடமுடியும்.

*பாயாசம் ஆறிவிட்டால் லேசாக சூடு செய்து பரிமாறவும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Nei Payasam Receipe in Tamil | Taste & Sweet Nei Payasam in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos