மார்கண்டம் சூப் செய்வது எப்படி???

மார்கண்டம் என்பது ஆட்டின் நெஞ்செலும்பு பகுதி.குழந்தைகளுக்கு இதில் சூப் செய்து கொடுப்பது நல்லது.

தேவையான பொருட்கள்:

மார்கண்டம் -1/4 கிலோ
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - காரத்திற்கேற்ப
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*குக்கரில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+தூள்வகைகள் மற்றும் மார்கண்டம் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் 2 அல்லது 3 கப் நீர் மற்றும் உப்பு சேர்த்து 3 அல்லது 4 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*பின் சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். மிளகுத்தூள் சேர்த்து சிறிது கொதித்ததும் இறக்கவும்.

*சூடாக பரிமாற நன்றாக இருக்கும்.

அறுசுவையான வேர்க்கடலை நிப்பட் செய்வது எப்படி??

பின் குறிப்பு:

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Markandam Soup Receipe in Tamil | Taste & spicy Markandam Soup in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos