ஸ்பெஷல் கடலைப்பருப்பு சுண்டல் செய்வது எப்படி.....

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய மாங்காய் -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
பொடியாக நறுக்கிய இஞ்சி -1/2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

பச்சை பட்டாணி சுண்டல் செய்வது எப்படி.....

தாளிக்க:
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு  -தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*கடலைப்பருப்பை உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து முழ்குமளவு நீர் சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து  பச்சை மிளகாய்+வேகவைத்த கடலைப்பருப்பு மற்றும் மாங்காய் சேர்த்து வதக்கி தேங்காய்த்துறுவல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

பின் குறிப்பு:

*விரும்பினால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கலாம்.

*வடிகட்டிய நீரை வீணாக்காமல் சூப்/ரசம் செய்யலாம்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Kadalai Parupu Sundal Receipe in Tamil | Taste & Spicy Kadalai Parupu Sundal in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos