பச்சை பட்டாணி சுண்டல் செய்வது எப்படி.....

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி -1/2 கப்
கொத்தமல்லித்தழை- 1 கைப்பிடி
பச்சை மிளகாய் -2
தேங்காய்த்துறுவல்- 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய மாங்காய் -1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌:

எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு தலா -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/8 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பச்சை பட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

*மறுநாள் குக்கரில் பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து தேவைக்கு நீர் ஊற்றி 3 விசில் வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.

*கொத்தமல்லித்தழை மற்றும் பச்சை மிளகாயினை கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து அரைத்த கொத்தமல்லி மசாலாவை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.பின் வேகவைத்த பட்டாணியை சேர்த்து நன்கு கிளறிய பின் தேங்காய்த்துறுவல்+கறிவேப்பிலை மற்றும் மாங்காயினை சேர்த்து கிளறவும்.

*கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

மரவள்ளிக்கிழங்கு இனிப்பு புட்டு செய்வது எப்படி!!!!

பின்குறிப்பு:

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Green Peas Sundal Receipe in Tamil | Taste & Spicy Green Peas Sundal in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos