ரவை பணியாரம்
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
துருவிய சுரைக்காய் - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 சிறு துண்டு
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை விளக்கம்:
*ரவையை உப்பு மற்றும் தயிர் சேர்த்து கெட்டியாக கலக்கவும்.
*அதில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ரவையில் கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
*பணியாரக் குழியில் மாவை விட்டு இருபக்கமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்