பருப்பு சாதம் | Dal Rice
தேவையான பொருட்கள்:
பொன்னி அரிசி - 11/2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
பூண்டுப் பல் - 4
பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை,கொத்தமல்லி - சிறிது
தாளிக்க:
பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
*வெங்காயம், பூண்டு, தக்காளி மற்றும் பச்சை மிளகாயை அரியவும்.
*குக்கரில் பட்டர் மற்றும் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.
*பின் வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
*பொன்னி அரிசிக்கு 1 கப்=2 கப் தண்ணீர் அளவு,ஆக 11/2 கப் அரிசிக்கு=3 கப் தண்ணீர் மற்றும் 1/2 கப் துவரம்பருப்புக்கு 1 கப் தண்ணீர் அளவு.
*வதங்கியதும் அரிசி, துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 4 கப் தண்ணீர் வைத்து குக்கரை மூடவும்.
*ஆவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் அல்லது 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை உடையாமல் கிளறவும்.
பின் குறிப்பு:
இதற்க்கு தொட்டுக் கொள்ள அப்பளம்,ஊறுகாய் இருந்தாலே போதும்,ரொம்ப நல்லாயிருக்கும்