வாழைக்காய் புட்டு
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நசுக்கிய பூண்டுப்பல் - 4
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ஊப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*வாழைக்காயை தோலோடு வேகவைக்கவும்.வெந்ததும் தோல் தனியாக வந்துவிடும்.
*வாழைக்காயினை துருவிக்கொள்ளவும்.அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் சோம்புத்தூள் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம், நசுக்கிய பூண்டுப்பல் மற்றும் பச்சை மிளகாயினை போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் வாழைக்காயினை போட்டு நன்கு கிளறவும்.
*பொலபொலவென வரும்போது தேங்காய்த்துறுவலை சேர்த்து இறக்கவும்.