கத்திரிக்காய் தக்காளி மசாலா | Eggplant tomato Fry

தேவையான பொருட்கள்:

சின்ன கத்திரிக்காய் - 10

பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியது

பொடியாக அரிந்த தக்காளி - 4 பெரியது

வரமிளகாய்த்தூள்,தனியாத்தூள் - தலா 1/2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை - மேலே தூவ

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

வேர்க்கடலை - 1/2 கப்

வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன் 

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை விளக்கம்:

*கத்திரிக்காயை கட் செய்து ,சிறிது எண்ணெய் சேர்த்து பிசிறி முற்சூடு செய்த அவனில் 210°C டிகிரியில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*கடாயில்எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, தூள் வகைகள் மற்றும் உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*அனைத்தும் நன்கு வதங்கியதும் கத்திரிக்காயை சேர்த்து நன்கு கிளறி அரைத்த விழுதுகளை சேர்த்து நன்கு பிரட்டவும். 

*இறக்கும் சமயத்தில் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும். 

பின் குறிப்பு:

*கத்திரிக்காயை எண்ணெயில் பொரிக்காமல் அவனில் க்ரில் செய்து செய்துள்ளேன்.புளிக்கு பதில் தக்காளியை நிறைய சேர்த்திருக்கேன்.இந்த முறையில் செய்வதால் எண்ணெயும் குறைவாக செலவாகும்,சுவையும் நன்றாகயிருக்கும்

Related Videos