ஸ்டப்ட் எண்ணெய் கத்திரிக்காய் | Stuffed Ennai Kathirikkai

தேவையான பொருட்கள்:

சின்ன கத்திரிக்காய் - 6

வெங்காயம்,தக்காளி - தலா 1/2

இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் குறைவாக

புளிவிழுது - 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிது

வெல்லம் - சிறிது

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

வறுத்து அரைக்க

காய்ந்த மிளகாய் - 3

தனியா - 1/2 டீஸ்பூன்

மிளகு,வெந்தயம்,கடுகு - தலா 1/4 டீஸ்பூன் கொஞ்சம் குறைவாக

சோம்பு,சீரகம்,எள் - தலா 1/4 டீஸ்பூன்

வேர்க்கடலை - 1 டீஸ்பூன்

கசகசா - 1/4 டீஸ்பூன்

தேங்காய்த்துறுவல் - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக அரைக்கவும்.

*பின் வெங்காயம்,தக்காளியையும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*கத்திரிக்காயை 4ஆக கீறி வறுத்தரைத்த பொருளை ஸ்டப் செய்யவும்

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

*பின் கரம் மசாலா மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி ஸ்டப் செய்த கத்திரிக்காயை சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*கத்திரிக்காய் ஒரளவுக்கு நிறம் மாறி வரும் போது அரைத்த வெங்கய தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

*புளி விழுதை சிறிது நீரில் கரைக்கவும்.இதனுடன் வறுத்தரைத்த மசாலா மீதமிருந்தால் கரைக்கவும்.

*கத்திரிக்காய் நன்கு வெந்து வரும் போது புளிகரைசல் மற்றும் உப்பு சேர்க்கவும்.

**நன்கு வெந்து கிரேவியாக வரும்போது வெல்லம் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

பின் குறிப்பு:

*குக்கரில் செய்தால் நிறைய எண்ணெய் சேர்த்து செய்யவேண்டும்,அப்போழுதுதான் அடிபிடிக்காமல் வேகும்.

*குறைவான எண்ணெயிலேயே கடாயில் சிறுதீயில் அடிக்கடி கிளறிவிட்டு செய்யலாம்.

*புலாவ்,பிரியாணி,கலவை சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன்.

*இதனுடன் கத்திரிக்காய் வெந்த பிறகு சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து செய்தால் க்ரெவியாக பரிமாறலாம்

Related Videos