பச்சைப் பட்டாணி கோஸ் பொரியல் | Green Peas Cabbage Poriyal
தேவையான பொருட்கள்:
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கோஸ் -1 கப்
நறுக்கிய வெங்காயம் -1
கீறிய பச்சை மிளகாய் -2
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை விளக்கம்:
*பச்சை பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும். அந்த நீரை கீழே ஊற்றவேண்டாம்
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், கோஸ் மற்றும் உப்பு என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி பட்டாணி வேகவைத்த நீரை ஊற்றி வேகவிடவும்.
*கோஸ் வெந்ததும் வேகவைத்த பட்டாணி மற்றும் தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
பின் குறிப்பு:
*இதற்கு ப்ரோசன் பட்டாணி மற்றும் ப்ரெஷ் பட்டாணியை விட காய்ந்த பட்டாணியை ஊறவைத்து செய்தால்தான் நன்றாக இருக்கும்.
*இதே போல் கோஸ் பதிலாக பீட்ரூட்டிலும் செய்யலாம்