கோஸ் அப்பளப்பூ கூட்டு

தேவையான பொருட்கள்: 

நறுக்கிய கோஸ் - 1 கப்
பொரித்த அப்பளப்பூ - 5
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
கடலைப்பருப்பு - 3/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
சோம்பு - 3/4 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் - 3
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை விளக்கம்:

*கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து பாத்திரத்தில் வேகவைக்கவும்.

*3/4 பாகம் பருப்பு வந்ததும் கோஸ், பச்சை மிளகாய் , தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து மேலும் நன்கு வேக வைக்கவும்.

*அனைத்தும் நன்கு வெந்ததும் நொறுக்கிய அப்பளப்பூ, உப்பு மற்றும் உருளையை உதிர்த்து போடவும்.

*கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து போடவும்.

Related Videos