வெள்ளை பூசணிக்காய் பொரியல் | Simple Ash Gourd Poriyal
தேவையான பொருட்கள்:
துண்டுகளாகிய வெள்ளை பூசணி -2 கப்
வேர்க்கடலை - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பூசணித்துண்டுகள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
*தண்ணீர் ஊற்றவேண்டாம்,மூடி போட்டு வேகவிடவும்.
*10 - 15 நிமிடங்களில் வெந்துவிடும்,இடையிடையே கிளறிவிடவும்.
*வெந்ததும் கரகரப்பாக பொடித்த வேர்க்கடலையை தூவி இறக்கவும்.
பின் குறிப்பு:
*வேர்க்கடலைக்கு பதில் தேங்காய்த்துறுவலும் சேர்க்கலாம்