பிரியாணி கத்திரிக்காய் | Muslim Style Biryani Kathirikkai
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 1 பெரியது
வெங்காயம் -1 பெரியது
பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் -1 டீஸ்பூன்
புளிவிழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
வேர்க்கடலை -2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு + உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை -2
மிளகு - 1/2 டீஸ்பூன்
பெ.சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை விளக்கம்:
*கத்திரிக்காய் மற்றும் வெங்காயம் இவற்றை நீளவாக்கில் நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் வெள்ளை எள்ளை மட்டும் வறுத்து அதனுடன் வேர்க்கடலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
*பாதியளவு கத்திரிக்காய் வதங்கியதும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
*கத்திரிக்காய் நன்கு வெந்ததும் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து மேலும் வதக்கி அரைத்த விழுதினை சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.
*பின் புளிவிழுதினை சிறிது நீரில் கரைத்து ஊற்றி, நன்கு கிளறி பச்சை வாசனை போனதும் இறக்கவும்.
பின்குறிப்பு:
*சிறிய கத்திரிக்காயில் சமைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
*சிறுதீயில் நீர் ஊற்றாமல் கத்திரிக்காயினை வதக்கவும்.இதில் எண்ணெய் குறைவாகவே பயன்படுத்தியிருக்கேன்.