கிள்ளு மிளகாய் சாம்பார் | Killu Milagai Sambar
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1கப்
புளி - 1 எலுமிச்சைபழ அளவு
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
பூண்டு - 10 பல்
கொத்தமல்லித்தழை - சிறிது
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு + உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*பருப்பை லேசாக வெறும் கடாயில் வாசனை வரும்வரை வறுத்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
*ஊறியதும் அத்துடன் மஞ்சள்தூள்,உரித்த பூண்டுப்பல் சேர்த்து சரியான அளவு நீர் சேர்த்து குழைய வேகவைக்கவும்.
*வெங்காயம் மற்றும் தக்காளி பொடியாக நறுக்கவும்.பச்சைமிளகாயை நீளவாக்கில் அரியவும்.காய்ந்த மிளகாயை கிள்ளிவைக்கவும்.
*புளியை 1/2 கோப்பையளவு நீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
*பின் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாயை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*5நிமிடம் கொதித்ததும் வெந்தபருப்பை சேர்த்து நன்கு கலக்கி சிறிது நேரம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.