சாம்பார் வடை
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 5
சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 3/4 டேபிள்ஸ்பூன்
புளிகரைசல் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
நெய் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*குக்கரில் துவரம்பருப்பு, பூண்டுப்பல், மஞ்சள்தூள் மற்றும் 1 கப் நீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் ப.மிளகாய் சேர்த்து வதக்கி புளிகரைசல், உப்பு மற்றும் சாம்பார்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
*பரிமாறும் போது ஒரு சிறிய தட்டில் வடை வைத்து அதன் மேல் சாம்பாரை ஊற்றி விரும்பினால் நெய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவி சிறிது நேரம் கழித்து சாப்பிட நன்றாகயிருக்கும்