சுட்ட தக்காளி பூண்டு சட்னி | smoked garlic and tomato chutney
தேவையான பொருட்கள்:
பூண்டுப்பல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 15-20
தக்காளி - 1
புளி - எலுமிச்சையளவு
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 1 கப்
செய்முறை விளக்கம்:
*கடாயில் மிதமான தீயில் எண்ணெய் காயவைத்து பூண்டு+மிளகாயை கருகாமல் வறுத்தெடுக்கவும்.
*பின் தக்காளியை முழுதாக போட்டு நன்கு வதக்கவும்.கரண்டியால் நன்கு மசித்துவிடவும்.
*ஆறியதும் அனைத்தும் உப்பு மற்றும் புளி சேர்த்து மைய அரைக்கவும்.
*மீதமான எண்ணெயை சட்னியில் ஊற்றவும்.
பின் குறிப்பு:
*இதற்கு தாளிக்க தேவையில்லை.எண்ணெய் காயவைத்து வதக்கவும் தேவையில்லை,அப்படி செய்தால் சட்னியின் சுவை மாறிவிடும்.
*மிளகாய் மற்றும் பூண்டு கருகாமல் வறுத்தெடுக்கவும்.
*மிளகாயை அவரவர் காரத்திற்கேற்ப போடவும்.
*தக்காளி சேர்ப்பதால் தண்ணீர் ஊற்றி அரைக்கதேவையில்லை.