சோயா பட்டாணி மசாலா

தேவையான பொருட்கள்: 

சோயா உருண்டைகள் - 20
பச்சை பட்டாணி - 1 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
பொடியாக அரிந்த தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் =தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கசகசா - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 1
சோம்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு குளிர்ந்த நிரில் நன்கு அலசி நீரை பிழிந்து வைக்கவும்.

*பட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுதாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணேய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது மற்றும் தூள்வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் சோயா மற்றும் பட்டாணி சிறிது நீர் சேர்த்து கொதிக்க விட்டு அரைத்த விழுதை சேர்க்கவும்.

*பச்சை வாசனை போனதும் க்ரேவி கெட்டியானதும் இறக்கவும்.

*சப்பாத்திக்கு நல்ல மேட்ச்!!

Related Videos