காலிபிளவர் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்:

காலிபிளவர்  - 1 நடுத்தர அளவு

மைதா - 1/2 கப்

சோளமாவு - 1/8 கப்

மிளகுத்தூள்  - 1/2 டீஸ்பூன்

உப்பு-  தேவைக்கு
எண்ணெய் -  பொரிக்க+1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

தக்காளி கெட்சப் -  1டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

சோயா சாஸ்-  1/2 டீஸ்பூன்

வினிகர் -  1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்

பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்

சோளமாவு - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

வெங்காயத்தாள் - 1

செய்முறை விளக்கம்:

*காலிபிளவரை சிறுப்பூக்களாக பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் போட்டு எடுக்கவும்.

*மைதா+சோளமாவு+மிளகுத்தூள் மற்றும் உப்பு இவற்றை ஒன்றாக கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து பூக்களை நனைத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டுப்பல்+ வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளின் வெள்ளைப் பகுதி இவற்றை சேர்த்து வதக்கவும்.

*பின் பசை மிளகாய்+தக்காளி சாஸ்+தக்காளி கெட்சப்+சோயா சாஸ்+வினிகர்+1 டீஸ்பூன் சோளமாவு+சர்க்கரை மற்றும் உப்பு என இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி பொரித்த காலிபிளவரை சேர்த்து நன்கு கிளறவும்.

*பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை தூவி பரிமாறவும்.

பின் குறிப்பு:

*காலிபிளவரை பொரிக்கும் போது பொன்னிறமாக பொரித்தால் தான் நீண்ட நேரம்வரை மொறுமொறுப்பாக இருக்கும்.

*பச்சை மிளகாய் பதில் 1 டீஸ்பூன் பூண்டு சில்லி சாஸ் சேர்க்கலாம்.

Related Videos