ஒட்ஸ் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்:

ஒட்ஸ் - 1 கப்

மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கார்ன் மாவு - 1/2 டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
புட் கலர் - 1 சிட்டிகை

பொடியாக அரிந்த வெங்காயம் - 1

பொடியாக அரிந்த பூண்டுப்பல் - 3

பொடியாக அரிந்த குடமிளகாய் - 1 சிறியது

பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*ஒட்ஸை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*அதனுடன் சிறிது மற்றும் நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் மைதாமவு+உப்பு+கார்ன் மாவு+மிளகுத்தூள் மற்றும் புட் கலர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் காயவைத்து ஒட்ஸ் உருண்டையை மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.

*வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பூண்டுப்பல் மற்றும் குடமிளகாய் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.

*பின் சோயாசாஸ் சேர்த்து சிறிது நீர் தெளித்து கொதித்த பின் பொரித்த ஒட்ஸ் உருண்டைகளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

*அசத்தல் சுவையில் இருக்கும் இந்த மஞ்சூரியன்...

Related Videos