உருளைக்கிழங்கு காலா ஜாமூன்
தேவையான பொருட்கள்:
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1/4 கப்
பால் பவுடர் - 1 கப்
மைதாமாவு - 3/4 கப்
பால் - சிறிதளாவு
எண்ணெய் - பொரிக்க
புட் கலர் - 1 சிட்டிகை
நெய் - 1 1/2 டீஸ்பூன்
சர்க்கரை பாகு செய்ய
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*3/4 கப் பால் பவுடர் மற்றும் 1/4 கப் மைதா+மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து மிருதுவாக கெட்டியாக பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது பால் தெளித்து பிசையவும்.இந்த கலவை வெள்ளைக்கலரில் இருக்கனும்.
*மீதமிருக்கும் பால் பவுடர், மைதா மற்றும் கலர் சேர்த்து பால் கலந்து கெட்டியாக மிருதுவாக பிசையவும்.
*வெள்ளைக் கலரில் இருக்கும் மாவை பெரிய உருண்டைகளாக உருட்டி,அதனுள் கலர் உருண்டையை பட்டாணி அளவு எடுத்து ஸ்டப் செய்யவும்.
*இப்படியாக உருண்டைகளை உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.
*திரும்பவும் ஒருமுறை உருண்டைகளை எண்ணெயில் பொரிக்கவும்.அப்பொழுது கறுப்பு கலரில் இருக்கும்.
*சர்க்கரை நீர் விட்டு காய்ச்சி பிசுப்பு பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள்+நெய் மற்றும் பொரித்த் உருண்டைகள் சேர்க்கவும்.
*3 அல்லது 4 மணிநேரம் கழித்து பரிமாறலாம்