சிவப்பு குடமிளகாய் சட்னி
தேவையான பொருட்கள்:
சிவப்பு குடமிளகாய் - 1
வெங்காயம் - 1
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - 1 நெல்லிக்காயளவு
காய்ந்த மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*மிளகாய் மற்றும் வெங்காயம் இவற்றை துண்டங்களாக நறுக்கவும்.
*உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுக்கவும்.
*வெங்காயத்தையும் மற்றும் காய்ந்த மிளகாயை எண்ணெயில் வதக்கவும்.குடமிளகாயை லேசாக வதக்கவும்.
*முதலில் உளுத்தம்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயை அரைத்த பின் வெங்காயம், குடமிள்காய், புளி மற்றும் உப்பு சேர்த்து மைய அரைத்து தாளித்துக் கொட்டவும்.