வேர்க்கடலை ஜாமூன்
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கப்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
ரவை - 1 டீஸ்பூன்
பால் பவுடர் - 1/4 கப்
நெய் -1 டீஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - 1கப்
ரோஸ் எசன்ஸ் - 2 துளி
எண்ணெய் = பொரிக்க
செய்முறை விளக்கம்:
* வேர்க்கடலையை தோல் நீக்கி 1மணிநேரம் ஊறவைத்து நைசாக கெட்டியாக அரைக்கவும்.
*அதனுடன் ரவை, மைதா, பால் பவுடர் மற்றும் நெய் சேர்த்து பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் பால் சேர்த்து பிசையவும்.
*சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் நீர் வைத்து கொதிக்கவிடவும்.பிசுபிசுப்பு பதம் வந்ததும் எசன்ஸ் மற்றும் பொரித்த ஜாமூன்களை சேர்க்கவும்.
*1 மணிநேரம் கழித்து பரிமாறவும்.வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ஜாமூன்