வேகன் சாக்லேட் மஃபின்

தேவையான பொருட்கள்:

Self Raising Flour -3/4 கப்

கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்

பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூன்

சர்க்கரை - 1/2 கப்

தண்ணீர் - 1/2 கப்

வெஜிடேபிள் எண்ணெய் - 1/4 கப்

வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்

வெள்ளை வினிகர் - 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*அவனை 180°C  முற்சூடு செய்யவும்.

*மாவுடன் , பேக்கிங் சோடா மற்றும்  கோகோ பவுடர் கலந்து சலிக்கவும்.

*ஒரு பவுலில் தண்ணீர்+சர்க்கரை மற்றும் எண்ணெய்  சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும்  கோகோ கலவையை சிறிது சிறிதாக கட்டியில்லாமல் கலக்கவும்.

*கடைசியாக வினிகர் கலந்து மஃபின் கப்களில் 3/4 பாகம் வரை ஊற்றவும்.

*காலியான மஃபின் இடங்களில் தண்ணீர் ஊற்றி   30 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

பின் குறிப்பு:

*முட்டையில் செய்ததை போலவே இந்த கேக் நன்கு உப்பி வரும்.

*Self Raising Flour = 1 கப் மைதா , 1 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும்  1/2 டீஸ்பூன் உப்பு

 

Related Videos