ஈஸி அடை
தேவையான பொருட்கள்:
மீதமான வடை மாவு - 1 கப்
ஒட்ஸ் - 1/2 கப்
பொடியாக அரிந்த பசலைக்கீரை - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*ஒட்ஸை சிறிது நேரம் ஊறவைத்து அரைக்கவும்.
*வடைமாவு, அரைத்த ஒட்ஸ் மற்றும் கீரை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.தேவைக்கேற்ப நீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
*மாவினை அடைகளாக சுட்டெடுக்கவும்.
பின் குறிப்பு:
*வடைமாவில் உப்பு இருப்பதால் உப்பு பார்த்து போடவும்.அதிலயே வெங்காயம்+மிளகாய் சேர்த்திருப்பதால் இதெல்லாம் போடத்தேவையில்லை.