பைனாப்பிள் ஸ்கோன்ஸ்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 1/2 கப்
ஒட்ஸ் - 1 கப்
பொடித்த பிரவுன் சர்க்கரை - 1 1/2 கப்பொடியாக நறுக்கிய பைனாப்பிள் தூண்டுகள் - 1/2 கப்
பட்டர் - 1/4 கப்வெஜிடபிள் எண்ணெய் - 1/4 கப்
பட்டைதூள் - 1/4 டீஸ்பூன்பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
* கோதுமை மாவு, ஒட்ஸ், பட்டைதூள் மற்றும் பேக்கிங் பவுடர் ஒன்றாக கலக்கவும்.
*ஒரு பவுலில் பட்டர், எண்ணெய் மற்றும் சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக கலந்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.
*இதனுடன் மாவு வகைகள் மற்றும் பைனாப்பிள்துண்டுகள் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு கெட்டியாக கலக்கவும்.
*அவன் டிரேயில் கொஞ்சம் மாவு தூவி மாவை வட்டமாக 1 இஞ்ச் அளவில் தடிமனாக தட்டு முக்கோணங்களாக வெட்டவும்.
*190°C முற்சூடு செய்த அவனில் 25 - 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.