முட்டையில்லா சுகினி+வாழைப்பழ ப்ரெட்

இந்த ரெசிபியை மதுரம் குறிப்பில் பார்த்து செய்தது.ஒரிஜினல் ரெசிபியில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்திருப்பாங்க,நான் அதற்கு பதில் காய்ந்த திராட்சை சேர்த்து செய்திருக்கேன்.இதில் முட்டை,வெண்ணெய் எதுவும் சேர்க்காத ப்ரெட் ரெசிபி.ப்ரெட் ஆறியபிறகு துண்டு போட்டிருந்தால் கட் செய்ய ஈஸியாக இருக்கும்.நான் பேக்கிங் செய்து முடித்ததும் என் பொண்ணின் அழுகையால் சூடாக கட் செய்ய வேண்டியதாகிவிட்டது.ஷேப்தான் சரியாக வரலை.ஆனால் டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பர்ர்ர்!!

தேவையான பொருட்கள்:

பார்ட் -1

ஆல் பர்பஸ் மாவு - 1 1/2 கப்

பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்

பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்

பட்டைத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்

பார்ட் - 2

தோல் சீவி துருவிய சுகினி - 1 கப்

காய்ந்த திராட்சை - 1/4 கப்

பார்ட் - 3

வெஜிடேபிள் எண்ணெய் - 1/2 கப்

சர்க்கரை - 3/4 கப்

மசித்த வாழைப்பழம் - 1 பெரியது

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பார்ட் -1 கூறிய பொருட்களை ஒன்றாக கலக்கவும்.

*இதனுடன் பார்ட் - 2 கூறிய பொருட்களைக் கலக்கவும்.

*பார்ட் -3 கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து பீட்டரில் நன்கு அடிக்கவும்.இதனுடன் பார்ட் 1,2 கலவையை ஒன்றாக கலந்து ப்ரெட் செய்யும் பாத்திரத்தில் ஊற்றவும்.

*அவனை 180°C முற்சூடு செய்து 30 நிமிடம் இந்த கலவையை பேக் செய்து எடுக்கவும்.

*ஆறியதும் துண்டுகள் போடவும்.

 

 

Related Videos