பூந்தி லட்டு
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்
கல்கண்டு- 1/2 டேபிள்ஸ்பூன்
பச்சை கற்பூரம்- 1 சிட்டிகை
கிராம்பு -4
ஜாதிக்காய் பொடி- 1/8 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை - 1/8 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க
செய்முறை விளக்கம்:
*கடலை மாவு மற்றும் சமையல் சோடா இரண்டையும் கலந்து சலிக்கவும்.
*அதனுடன் மஞ்சள் கலர் மற்றும் 1 டீஸ்பூன் நெய் கலந்து தோசை மாவு பதத்திற்க்கு நீர் சேர்த்து கலக்கவும்.கண் கரண்டியில் ஊற்றினால் மாவு விழணும் அதுதான் சரியான பதம்.
*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3/4 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
*2 கம்பி பதம் பாகு காய்ச்சவும்.2 விரல்கலுக்கு இடையே தொட்டல் 2 இழை போல வரும்.
*1 கம்பி பதம் வந்ததும் சில நொடிகலிலேயே 2 கம்பி பதம் வரும்,கவனமாக எடுக்கவும்
*எல்லா மாவையும் கண்கரண்டியில் தோய்த்து பூந்திகளாக பொரித்து வைக்கவும்
*பொரித்த பூந்திகளை சர்க்கரை பாகில் கலந்ததும் பச்சை கற்பூரத்தை கையால் நன்கு பொடித்து கலந்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
*நெய்யில் கிராம்பு, முந்திரி திராட்சை மற்றும் ஜாதிக்காய் பொடி சேர்த்து வறுத்து பூந்தியில் சேர்க்கவும்.
*கடைசியாக கற்கண்டு சேர்த்து லட்டுகளாக பிடிக்கவும்.
பின் குறிப்பு:
*முதலில் பூந்தியை பொரித்த பிறகு,கடைசியாக சர்க்கரை பாகு வைத்து லட்டு பிடிக்கவும்.
*கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.ஆறினால் கூட பூந்திகளை அழுத்தி பிடிக்கும் போது சர்க்கரை பாகிலிருந்து வரும் நீரிலயே லட்டு பிடிக்க முடியும்.
*1 கம்பி பதத்திலும் பாகு வைத்து லட்டு பிடிக்கலாம்.
*2 கம்பி பதம் வைத்து செய்தால் லட்டு சர்க்கரை பாகு பூத்து அழகாக இருக்கும்,மேலும் கூடுதல் நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்