புழுங்கலரிசி முறுக்கு
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி - 2 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
வறுத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம்,எள் - தலா 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*அரிசியை கழுவி 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
*அதனுடன் பொட்டுக்கடலை மாவு, சீரகம், எள், உளுத்தமாவு வெண்ணெய் மற்றும் சூடான எண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*கடாயில் எண்ணெய் காயவைத்து முறுக்கு அச்சில் மாவை போட்டு முறுக்குகளாக பிழிந்து சுட்டெடுக்கவும்
பின் குறிப்பு:
* அரிசியை அதிகநேரம் ஊறவைத்து அரைத்தால் முறுக்கு எண்ணெய் இழுக்கும்.
*விரும்பினால் அரிசி அரைக்கும் போது காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கலாம்.
*பொட்டுக்கடலை மாவு சேர்த்த பிறகும் மாவு பதம் தளர்த்தியாக இருந்தால் ஒரு காட்டன் துணியில் 1/2 மணிநேரம் மாவை வைத்திருந்து எடுத்தால் கெட்டியாக இருக்கும்