போட்டி(ஆட்டுக்குடல்)குருமா | Aattu Kudal(Potti) Kurma

தேவையான பொருட்கள்:

போட்டி - 1

கத்திரிக்காய் - 5 சிறியது

அரிந்த வெங்காயம் - 1

அரிந்த தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 கைப்பிடி

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

தனியாத்தூள்,வரமிளகாய்த்தூள் - தலா 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 1/2 கப்

சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிக்க:

பட்டை - 1 சிறுதுண்டு
பிரியாணி இலை - 2

கிராம்பு - 4

கறிவேப்பிலை- சிறிது

செய்முறை விளக்கம்:

* போட்டியை சுத்தம் செய்து சுடுநீரில் நன்கு அலசவும்.தேங்காயை நன்கு மைய அரைக்கவும்.

*குக்கரில் போட்டிகடலைப்பருப்புசிறிது உப்புசிறிது இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிது நீர் சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.

*ஆறியதும் போட்டி வேகவைத்த நீரை ஊற்றிவிட்டு கடலைப்பருப்பை எடுத்து வைக்கவும்.கறியை சிறுதுண்டுகளாக வெட்டவும்.கத்திரிக்காயை பொடியாக வெட்டவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்தக்காளிமீதமுள்ள இஞ்சி பூண்டு விழுதுதூள் வகைகள்கத்திரிக்காய்வேகவைத்த கறி மற்றும் உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் தேவையான நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.கத்திரிக்காய் வெந்ததும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.

*இட்லி,தோசைக்கு பெஸ்ட்  காம்பினேஷன்...

 

Related Videos