மட்டன் புளிக்குழம்பு | Mutton Puli Kuzhambu
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
முருங்கைக்காய் - 2
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
புளி - 1 எலுமிச்சை பழளவு
கலந்த மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் -10
எண்ணெயில் வறுத்து அரைக்க:
தேங்காய்த் துறுவல் - 1/2 கப்
வடகம் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு -3
செய்முறை விளக்கம்:
*புளியை 1 கோப்பையளவு கரைத்து பூண்டுப்பல், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சுத்தம் செய்த மட்டன் போடவும்.
*வெங்காயம், தக்காளி மற்றும் முருங்கைக்காய் நறுக்கி வைக்கவும்.
*அரைக்க குடுத்துள்ளவைகளை அரைத்து அடஹ்னுடன் சீரகத்தை சேர்த்து மைய அரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம் மற்றும் தக்காளி வதக்கவும்.
*வதங்கியதும் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.மட்டன் வெந்ததும் முருங்கைக்காய் போட்டு வேகவிடவும்.
*மட்டன் மற்றும் காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
பின் குறிப்பு:
*இதனுடன் வெள்ளை முள்ளங்கியையும் சேர்க்கலாம்.அப்படி சேர்க்கும் போது தக்காளி வதங்கிய பின்னர் முள்ளங்கியைப் போட்டு வதக்கி புளிகரைசலை ஊற்றவும்.நல்ல வாசனையாகவும்,ருசியாவும் இருக்கும்.