முருங்கை கத்திரிக்காய் சாதம் | Drumstick Brinjal Rice
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
அரிந்த சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டுப்பல் - 2 டேபிள்ஸ்பூன்
முருங்கைகீரை - 1 கப்
முருங்கைகாய் - 3
நீளமாகவும் மெலிதாக அரிந்த பிஞ்சு கத்திரிக்காய் - 2 கப்
அரிந்த தக்காளி -2 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெயில் வறுத்து பொடிக்க
தனியா+கடலைப்பருப்பு+சோம்பு - தலா 1 டீஸ்பூன்
கசகசா+மிளகு -தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -5
பட்டை+கிராம்பு -தலா 1
செய்முறை விளக்கம்:
*அரிசியை கழுவி சிரிது நெய்யில் வறுத்து உப்பு மற்றும் 4 கப் நீர் சேர்த்து புலவு போல் செய்து கொள்ளவும்.
*கடாயில் எண்ணெய் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சீரகம் சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, முருங்கைகீரை, கத்திரிக்காய், துண்டுகளாகிய முருங்கைக்காய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சிறுதீயில் சமைக்கவும்.
*முருங்கைக்காய் வெந்ததும் மசாலா கெட்டியாகி என்ணெய் மேலே மிதந்து வரும் போது பொடித்த பொடி +மீதமிருக்கும் நெய் சேர்த்து வதக்கவும்.
*இந்த கலவையில் சாதத்தை சேர்த்து சிறு தீயில் கிளறி இறக்கவும்.
*சுவையான இந்த சாதத்துக்கு உருளை வறுவல், அப்பளம் மற்றும் ஊறுகாய் சூப்பர் காம்பினேஷன்