ப்ரெட் இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி??
தேவையான பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 8
கடலைப்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்
டோஸ்ட் ப்ரெட் பிஸ்ஸா செய்முறை......
ப்ரெட் இனிப்பு கொழுக்கட்டை செய்முறை:
*கடலைப்பருப்பை 3/4 பதமாக வேகவைத்து நீரை வடிக்கட்டவும்.ஒன்றும் பாதியுமாக அரைக்கவும்.
*வெல்லத்தில் சிறிது நீர் விட்டு பிசுபிசுப்பு பதம் வந்ததும் வடிகட்டவும்.
*வெறும் கடாயில் நுணுக்கிய கடலைப்பருப்பு மற்றும் தேங்காய்த்துறுவலை வறுக்கவும்.அதனுடன் ஏலக்காய்த்தூள், நெய் மற்றும் கரைத்த வெல்லம் சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும்.பூரணம் ரெடி!!
*ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி நீரில் நனைத்து நன்கு பிழிந்து பிசைந்துக் கொள்ளவும்.
*சிறு உருண்டையாக எடுத்து கிண்ணம் போல் செய்து அதனுள் பூரணத்தை வைத்து மூடவும்.
*ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். ஈசியாக உடனே செய்து விடலாம்.
*பூரணம் அவரவர் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்.
பின்குறிப்பு:
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Sweet Bread kolukattai Receipe in Tamil | Tasty & Spicy Bread Kolukattai Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil