தேங்காய் மாங்காய் சாதம் | Coconut Mango Pulihora
தேவையான பொருட்கள்:
சாதம் -2 கப்
தேங்காய்துறுவல் -1/2 கப்
மாங்காய்துறுவல் -1 கப்
பச்சை மிளகாய் -2
கடுகுப்பொடி -1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 21/2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கடலைப்பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை -1 கைப்பிடி
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*தேங்காய்த்துறுவல், மாங்காய்த்துறுவல், பச்சை மிளகாய் சேர்த்து நீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அரைத்து தேங்காய் மாங்காய் துறுவலை சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறி மஞ்சள்தூள், கடுகுப்பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
*இதில் ஆறவைத்த சாதம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி பரிமாறவும்