பீன்ஸ் வெள்ளைக் குருமா | Beans White Kurma

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
தேங்காய்ப்பால் - 1 சின்ன டின்
புதினா - சிறிது
உப்பு+எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சைசாறு - 1 டீஸ்பூன்

அரைக்க:

இஞ்சி - 1 அங்குலத்துண்டு
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 6

தாளிக்க:
பட்டை - 1துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரிஞ்சி இலை - ௧

செய்முறை விளக்கம்:

*பீன்ஸ், வெங்காயம் மற்றும்தக்காளி இவைகளை அரிந்துக் கொள்ளவும்.

*அரைக்க குடுத்துள்ளவைகளை அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, அரைத்த விழுது மற்றும் புதினா ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் பீன்ஸ் போட்டு வதக்கி உப்பு மற்றும்தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்து காய் வெந்ததும் எலுமிச்சைசாறு சேர்த்து இறக்கவும்.

Related Videos