தேங்காய்ப்பால் சர்க்கரைப் பொங்கல் | Coconut Milk sweet pongal

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
தேங்காய்ப்பால் - 3/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்
முந்திரி திராட்சை - தேவைக்கு
ஏலக்காய் - 2


செய்முறை விளக்கம்::
*அரிசியைக் கழுவி 11/2 கப் தண்ணீரில் ஒரு பாத்திரத்தில் வேகவைக்கவும்.
* தண்ணீர் சுண்டி வரும் போது தேங்காய்ப்பால் ஊற்றவும்.
*அரிசி வேகாமல் இருந்தால் மேலும் சிறிது நீர் சேர்த்து வேகவைக்கவும்.
*அரிசி வெந்ததும் சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்.
*நன்கு நீர் சுண்டி வரும் போது ஏலக்காய்ப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி திராட்டை மற்றும் மீதமிருக்கும் நெய் சேர்த்து இறக்கவும்.

பின்குறிப்பு:

இந்த பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

Related Videos