பூண்டு - சின்ன வெங்காயத்தொக்கு | Garlic Small Onion Thokku
தேவையான பொருட்கள்:
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் - 15
பொடியாக அரிந்த பூண்டுப்பல் - 6
பொடியாக அரிந்த தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம், பூண்டுப்பல், தக்காளி, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு எண்ணெயிலேயே நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
*இட்லி,சப்பாத்திக்கு நன்றாகயிருக்கும்